“டேய் முருகா அடேய் முருகா... அடேய், நில்லு டா. என்ன டா கூப்புடுறது கூட
காதுல விழாத மாதிரி போயிட்டிருக்க ?” மண்ணு படிஞ்ச வேட்டியும் வெறுங்காலுமா
மண்வெட்டிய தோள் மேல போடுக்கிட்டு செத்த பொணம் குழியிலருந்து எழுந்து
நடந்தாப்ல போயிக்கிட்டு இருந்த முருகன சைக்கிள்ல வெரட்டி புடிச்சி
நிறுத்தினான் காண்டீபன். காண்டீபனும் முருகனும் ஊர் பள்ளிக்கூடத்துல 3வது
வரைக்கும் ஒன்னா படிச்சவனுங்க. அஞ்சாவது வரைக்கும் இருந்த பள்ளிக்கூடத்துல
அதுக்கு மேல படிக்கல ரெண்டுபேரும். இப்ப காண்டீபனுக்கு ஊருக்குள்ள இருந்த
மத்த இளவட்டங்க போல பட்டிணத்துல தான் பொழப்ப ஓட்டுது. நல்லது கெட்டதுல
கூடறது கூட கொறஞ்சி போச்சி காண்டீபனுக்கு.
“என்ன கண்டீபா, நல்லா இருக்கியா. எப்ப பட்டிணத்துல இருந்து வந்த ??” உயிரில்லாத மூஞ்சியில வார்த்த எல்லாம் எந்திரிச்சி வரவே நேரம் புடிச்சிது.
“என்ன யா போகப் போக ஆளே மாறிட்டியே யா.” காண்டீபனையும் நெலத்தையும் மாறி மாறி பாத்தது முருகனோட கண்ணு. காண்டீபன், முருகனோட இத்துப் போன ஒடம்பையும் மனசையும் நல்லாவே உணர்ந்தான். அவன் பொழப்புக்கு காரணம் மட்டும் தான் விளங்கல காண்டீபனுக்கு. முருகனோட வீடு அவ நிக்கிற எடத்துலருந்து கொஞ்சம் தொலவுல தான் இருந்தது.
“சரி, வா. வந்து சைக்கிள்ல ஏறு. வீட்டுக்கு போயி பேசிக்கலாம்.” சிலையாட்டம் நின்னுக்கிட்டு இருந்த முருகனோட கையப் புடிச்சி இழுத்து பின்னுக்கு தள்ளினான் கண்டீபன். முருகன் ஒக்காந்ததும் காண்டீபன் சைக்கிள வேகமா விட 2 நிமிசத்துல வந்துருச்சி வீடு.
ஊரு, வந்தவாசி டவுன்லருந்து 40 கிமீ தள்ளி இருந்த வணக்கம்பாடி. ஊருக்கு வெளிய இருந்த முக்கியமானது மூணு மட்டும் தான். ஒரு டீ கடை, பஸ்ஸ விட்டு இறங்குறவங்க பசிச்சா திங்க ஒரு இட்லி கடை. அதுவும் காலையில தான். அதுக்கடுத்து கூரையே இல்லாத ஒரு பஸ் ஸ்டாண்டு. ஊருக்குள்ள நுழைய ஒரே ஒரு ஒத்தயடிப் பாத தான். 2 கிமீ க்கு அங்கிட்டு தான் வீடுகளயே பாக்க முடியும். ஊருக்கு முன்ன மல்லாட்ட, சோளம், காராமணி கரும்புன்னு பாக்கலாம். இன்னும் பல மைல் தொலவு போக அங்க இங்கன்னு கொஞ்சம் நெல் வயலயும் பாக்க முடியும். ஊருக்குள்ள நொழஞ்சதுமே கண்ணுல படுற மொத வீடு முருகன் வீடுதான்.
கிழக்க முள்ளுக்காடு, மேற்கயும் தெக்கயும் வேட்டக்கார மாணிக்கத்தோட வயலு. வடக்க 2 ஏக்கருக்கும் கொஞ்சம் கொறவா தான் இருக்கும் முருகனோட நிலம். ஏதோ, வருசத்துக்கு ரெண்டு தடவயாச்சும் மல்லாட்ட போட்டுக்குவான். கொறைக்கு மத்தவுங்க நெலத்துல வேல பாத்து வயத்த கழுவிக்குவான் அவனும் அவன் பொண்டாடி சாமுண்டியும். வேட்டக்கார மாணிக்கம் நெலத்துக்கும் தன் நெலத்துக்கும் நடுவ ஒரு சின்ன குடிச வீட்டுல தான் அந்த ரெண்டு சீவனும் இருந்ததுக.
“சாமுண்டி, நல்லாருக்கியா ?” சைக்கிள் வீட்ட நெருங்கும் போது குடிசக்குள்ளருந்து வெளியே வந்த சாமுண்டிய பாத்து சத்தமா கேட்டு சின்னதா ஒரு சிரிப்பு சிரிச்சான் காண்டீபன். முகத்துல எந்த ஒரு உணர்ச்சியுமில்லாம தேங்கா நாராடம் இருந்த முடிய தடவிக்கிட்டே தலைய மட்டும் கொஞ்சமா அசச்சா சாமுண்டி. தெரு ஒரு அஞ்சி அடி ஒயரத்துல இருக்கும். தெருவுலயே எறங்கி முருகனும் காண்டீபனும் சைக்கிள தள்ளிக்கிட்டே வீட்ட நோக்கி நடந்தாங்க. முருகனுக்கு தனுக்குன்னு இருந்து சின்ன குடிச வீடு, வீட்டுக்கு பின்ன இருந்த துளி நெலம் அத்தோட ஒரு கறவ மாடு. வருசத்துல எப்பவாச்சு ஒரு தடவ பாக்குறவனா இருந்தலும் தெரிஞ்சவன் தான்னு காண்டீபன பாத்து தலைய அசச்சி காட்டுச்சி மாடு. முருகன் தோளு மேல கெடந்த மண்வெட்டிய வீட்டுக்கு எதுக்க மாடு கட்ட இருந்து சின்ன கொட்டாவுல வச்சிட்டு வெளிய வந்தான். இடுப்புல கட்டி இருந்த அழுக்கு துண்ட உருவி கொட்டாவுக்கு எதுக்க இருந்த சின்ன பாறையில தூசி தட்டி காண்டீபன ஒக்காரச் சொல்லி சைகை பண்ணாங்.
“நீ ஒக்காரப்பா...” காண்டீபன், முருகன வச்சக்கண்ணு வாங்காம பாதுக்கிட்டே பறையில ஒக்காந்தான். மத்திய நேரம் வயத்துக்கு ஒரு சின்ன பாணையில கரச்சி வச்சிருந்த கேப்ப கூழ ஒரு கையிலயும் நிறம் மறிப்போன ரெண்டு அலுமினிய குடிவைய ஒரு கையிலயும் புடிச்சிக்கிட்டு வேகமா வந்தா சாமுண்டி. சாமுண்டிக்கு வயசு 25 இல்ல 26 இருக்கும். கிட்டத்தட்ட அதே வயசு தான் முருகனுக்கும். சாமுண்டிக்கு கருப்பு தோலு தான். ஆன, சூரியன் முளைக்கிறதுக்கு முன்ன இருக்கும் பாருங்க ஒரு இருட்டு அந்த நிறம். நல்ல களையான முகம், சத புடிப்பில்லாத ஒடம்பு. தல முடி மட்டும் ஒரு அடி கூட இருக்காது. அதுவும் எண்ண வச்சி படிய சீவினாலும் பரப்பிக்கிட்டு நிக்கும். அப்படி ஒரு பரட்ட தல மண்ட. பாணையிலருந்த கூழ படபடன்னு ரெண்டு குடுவையிலயும் நெறப்பி கொடுத்துட்டு மாட்டு கொட்டாவுக்கு பக்கத்துலருந்த அரச மரத்து நெழலுல குத்த வச்சி ஒக்காந்தா சாமுண்டி. கல்யாணமாகி 2 வருசமாகியும் இன்னும் சாமுண்டி வயத்துல ஒரு புழு பூச்சி வைக்கலைங்குற கவலையில ரெண்டும் இப்படி இத்துப் போயி இருக்குங்களோன்னு நெனச்சிக்கிட்டே கூழ கொஞ்ச கொஞ்சமா குடிச்சான் காண்டீபன்.
“மெட்ராசுல இன்னும் அண்ணன் வேல செஞ்சிட்டிருந்த அதே ஓட்டல் கடையில தான இருக்கப்பா ?” இருந்து இருந்து பாத்துட்டு ஏதோ கேக்கணுமேன்னு கேட்டான் முருகன்.
“ம்ம் அங்க தாங்பா இருக்கேங். ஒத்தயில இருந்த வரைக்கும் பொழப்பு ஓடுச்சி. போன வருசம் இருந்த கொஞ்ச நஞ்ச நெலத்தயும் வித்துப்புட்டு ஆத்தா அப்பன கூட்டிக்கிட்டு போனதுலருந்து எதுவும் சரியில்லாப்பா. கொஞ்சம் கஸ்டமா தான் இருக்கு.” எதையோ சொல்லிடணுமின்னு வாயெடுக்க தோனுது ஆனா சட்டுன்னு சொல்ல முடியல காண்டீபனால. கொஞ்ச நேரத்துல மனசுக்குள்ள தெம்ப சேத்துக்கிடுட் சொல்ல வந்தத சொல்ல தொடங்கினாங் காண்டீபன்.
“உங்கிட்ட ஒரு முக்கியமான சங்கதிய சொல்லணுமின்னு தானப்பா வந்தேன்.” பாதி கூழ குடிக்கமலேயே குடுவைய பாறையில ஒரு பக்கமா வச்சிட்டு வேட்டியில வாய தொடச்சிக்கிட்டு முருகன பத்தான் கண்டீபன். முருகனும் சாமுண்டியும் காண்டீபனயே உத்து பாக்க பொருமைய ஆரம்பிச்சான்.
“முருகா, நல்லா தனப்பா இருந்தாரு. என்ன ஆச்சோ தெரியல...” காண்டீபன் சொல்ல தொடங்கினதுமே முருகன் கண்ணுல தண்ணி வர ஆரம்பிச்சிடுச்சி.
“போன வாரம் உங்கப்பன் தவறிட்டாருப்பா...” சங்கதிய சொல்லிட்டு படக்குன்னு தலைய குனிஞ்சிக்கிட்டான் காண்டீபன்.
“ஐயோ, சொன்னபடியே செஞ்சிட்டானா எங்கப்பான்...” தோளுல கெடந்த துண்ட வாயில பொத்தி “ஓ” ன்னு அழுத முருகன் பாறையிலருந்து சரிஞ்சி விழுந்தான். பதறிப்போன காண்டீபனும் சாமுண்டியும் ஓட வந்து ஆளுக்கொரு பக்கமா புடிச்சி வீட்டு திண்னையில ஒக்காத்தி வச்சாங்க.
“மாமா... கடைசியா முகம் பாக்க கூட தகுதியத்தவங்களாக்கிட்டியே...” முருகன நெஞ்சில சாச்சிக்கிட்டு அழுதா சாமுண்டி. சாமுண்டி அழுத சத்தம் கேட்டு வேட்டக்கர மணிக்கம் வயலுல வேலையில இருந்த ஆணு பொண்ணுன்னு எல்லாம் பரபரன்னு கூடிருச்சிக. ரெண்டு வருசத்துக்கு முன்ன சாமுண்டிக்கும் முருகனுக்கும் கல்யாணமான கையோட மெட்ராசுக்கு போனவரு தான் கோவிந்தன். ஏன் எதுக்குன்னு ஊருக்குள்ள நெறைய புரளி உண்டு. ஆனா, உண்மை முருகன், சாமுண்டி கோவிந்தன் னு மூனு பேருக்கு மட்டும் தான் தெரியும்.
சரியா 2 வருசத்துக்கு முன்ன முனீஸ்வரன் கோயில்ல ரொம்ப அமைதியா தான் முருகனுக்கும் சாமுண்டிக்கும் கல்யாணம் நடந்து முடிஞ்சிது. சாதி சனம், அக்கம் பக்கமிருக்கவங்கன்னு எல்லாரையும் கூப்புட்டு கெடா அடிச்சி விருந்து வச்சி தடபுடலா நடத்த கோவிந்தன் விரும்பல. அப்படியாபட்ட கல்யாணம் அது. கோவிந்தனுக்கு மிச்சமிருந்த கடைசீ கடமை முருகனோட கல்யாணம் தான். ஊருக்கு நடுவுல இருந்த ராக்காயி ஏரிக்கு தெக்க இருக்க மூங்கில் தோப்ப கடந்தா வந்துடும் முனீஸ்வரன் கோயிலு. கோவிந்தன் குடும்பத்தோட சேத்து இன்னும் ஒரு 20 குடும்பத்துக்கு முனீஸ்வரன் தான் கொலதெய்வம். ஊருக்குள்ள இருந்த ஓரே முனீஸ்வரன் கோயிலும் அது தான். கல்யாணமானாலும், காதுகுத்தா இருந்தாலும், வேறு எதுவும் முக்கியமான காரியமா இருந்தாலும் முனீஸ்வரன கும்பிட்டு ஆரம்பிக்கிறது தான் இவங்க வழக்கம்.
கோவிந்தனுக்கு வயசு எப்படியும் 80க்கும் மேல இருக்கும். முதல் தாரம் கட்டின 2 மசத்துலயே நோவுல இறந்த பிறகு 5 வருசம் கழிச்சி கட்டிக்கிட்ட கனகாவுக்கு பொறந்தவிங்க 2 பேரு. மூத்தவன் பூங்காவனம் இளையவன் முருகன். 2 ஆம் தாரமும் கடைசீ வரைக்கும் அவரு கூட வர குடுத்து வைக்கல. தண்ணி பட்டா தெறிச்சி போற மாதிரி ஒரு வழுக்க மண்டையா இருந்தாலும் அங்கங்க கொஞ்சம் நர முடி இருந்துச்சி கோவிந்தனுக்கு. தோலுல சுருக்கம் விழுந்தாலும் ஒடம்பு தெம்பா இருந்தது கோவிந்தனுக்கு. சமீபத்துல நடந்ததெல்லாம் தான் மனுசனோட மனச கொஞ்சம் அடிச்சி போட்டுருச்சி. மனசு தெம்பா இல்லைனா மனுசனெல்லாம் உயிரில்லாத மண்ணு பொம்மை மாதிரி தான இருப்பாங்க. அப்படி தான் இருந்தாரு கோவிந்தனும்.
கல்யாணத்துல இருந்தது கொஞ்சம் பேரு தான். கூட பொறந்த அண்ணன் ஒருத்தர் இருந்தாரு கோவிந்தனுக்கு. அவரு இப்ப இல்லைனாலும் சித்தப்பன் மேல உசுரா இருந்தான் சுப்பிரமணியன். கோவிந்தனோட அண்ணன் காளியோட ஒரே பையன் தான் சுப்பிரமணியன். சுப்பிரமணியன் அவன் பெண்டாட்டி முனியம்மா, ஒரே பையன் சகாதேவனோட கல்யாணத்துக்கு வந்திருந்தான். மத்தபடி வேட்டக்கார மாணிக்கம், கூட பழகினவங்கள்ல மனசுக்கு ரொம்ப நெறுக்கமான செவிடரும் பாம்பும் கல்யாணத்துல இருந்தாங்க. இவங்கள்லாம் இல்லாம கல்யாணப் பையன் பொண்ணு கோவிந்தனோட கோயில் பூசாரி. வெரல விடு நொடியில எண்ணிப்புடலாம் கல்யாணத்துக்கு வந்தவங்கள.
முருகனுக்கு சாமுண்டிய கட்டி வைக்கணுமின்னு கோவிந்தனுக்கு வேண்டிய பெருசுங்கள்லாம் சேந்து ஒப்புக்க வச்சிதுங்க. பின்ன அவங்களும் கோவிந்தனும் சேந்து முருகன ஒப்புக்க வச்சாங்க. சாமுண்டி எதையுமே கண்டுக்காம பெரியவங்க சொன்னத செஞ்சிட வேண்டியது தான்னு வாயப்பொத்தி ஒக்காந்துட்டா. முருகனுக்கு இத ஒப்புக்க மனமில்ல.
“அண்ணன் செத்து பொதச்ச எத்துல இன்னும் புல்லு கூட மொளச்சிருக்காது. அதுவும் அண்ணன் பெண்டாட்டிய எப்படி கட்டிக்கிறது ??” முடியவே முடியாதுன்னு ஒத்த காலுல நின்னான் முருகன்.
சாமுண்டி கோவிந்தனுக்கு தங்கச்சி மக. தங்கச்சி தூரத்து உறவு. புருசனில்லாம வயசுக்கு வந்த பொண்ணோட கஷ்டப்பட்டவள கூட்டியாந்து தன் வீட்டுக்கு பக்கத்துலயே குடி வச்சாரு கோவிந்தன். அப்படியே தன் மூத்த பையன் பூங்காவனத்தயும் கட்டி வச்சாரு. என்ன ஆச்சோ ஏதாச்சோ தெரியல கல்யாணமான ஆறே மாசத்துல சுடுகாட்டுல தனக்கு தானே குழிய வெட்டி பூச்சி மருந்த குடிச்சிட்டு குழிக்குள்ள படுத்து உயிர மாச்சிக்கிட்டான் பூங்காவனம். இப்ப யாருமில்லாத அனாதையா நிக்கிற சாமுண்டிய என்ன பண்ணுறது ?. கோவிந்தன் செத்ததுக்கு அப்புறம் அவள பாத்துக்க யாரு இருக்கா ?. இதெல்லாம் மனசுல போட்டு கசக்கிப் புழிஞ்ச பெருசுக பண்ண முடிவு தான் இது. இதுக்கு வேற வழி இல்லாம ஒத்துக்கிட்டாரு கோவிந்தன். முருகன் முரண்டு புடிச்சாலும் எல்லா பெருசுகளுமா சேந்து சொன்னத தட்ட முடியல. ஒத்துக்கிட்டான்.
கல்யாணத்த படபடன்னு முடிச்சி வச்சிட்டு அக்கடான்னு சாஞ்சி ஒக்காந்துட்டாரு கோவிந்தன். கல்யாணம் முடிஞ்சி 3 மாசம் ஆனதுக்கு அப்புறம் கொஞ்ச கொஞ்சமா முருகன் சாமுண்டி கிட்ட சகசமா பேசி பழகினத பாத்து சந்தோசப்பட்டாரு கோவிந்தன். என்ன தான் மூத்தவன் வாழ்க்க இப்படி மண்ணா போயிட்டாலும் நாம பாத்து கையப்புடிச்சி வச்ச பொண்ணு வாழ்க்கைய கர சேத்தாச்சின்னு பெருமூச்சி விட்டாரு கோவிந்தன்.
“யோவ், செவிடரே. என்ன டா நாம பாத்து கட்டி வச்சோமே, இப்படி என்ன ஏதுன்னு கூட தெரியாம அந்த பொண்ண விட்டுட்டு போயிட்டானேன்னு நெஞ்சி வெடிச்சி போயி இருந்தேன் யா. இப்ப மனசு கொஞ்சம் நிம்மிதியா இருக்கு யா.” சாராயம் உள்ள போகப் போக மனசுல இருக்குறதெல்லாம் ஆம்பளைங்களுக்கு வெளிய வாரது சகசம் தானே. செவிடரோட சேந்து மனசுல இருந்த ஒரு பாரத்த எறக்கி வச்ச நிம்மதியில குடிச்சிக்கிட்டு இருந்தாரு கோவிந்தன். செவிடருக்கும் கோவிந்தனுக்கும் நல்ல பழக்கம். எங்க போனாலும் ரெண்டு பேரும் சோடியா போறது வழக்கம். நல்லது கெட்டது எதையும் ஒருத்தர ஒருத்தர் கலக்காம செய்யவே மாட்டாங்க. ஒரு தாய் வயத்துல பொறக்காதது ஒன்னு தான் கொற. மத்தபடி ரெண்டு பேரும் கூட பொறந்த பொறப்பு மாதிரி தான்.
“யோவ், என்ன யா பெருசா பேசுற பேச்சி. இப்ப அப்படி என்னத்த செஞ்சிட்டன்னு இப்படி சந்தோசமா வந்து குடிக்கிற...” குடிச்சவன் ஏதோ அனத்துறான்னு கண்டுக்காம குடிச்சாரு கோவிந்தன்.
“யோவ், ஒத்துக்கறேன் யா. நாங்க தான் யா உங்கிக்க அடிச்சி பேசி முருகன சாமுண்டிக்கு கட்டி வைக்க சொன்னோம். ஆனா, அதே வீட்டுல ஒன்னா பொழங்குற உனக்கு தெரியாதா யா என்ன நடக்குதுன்னு ??” கோவிந்தன் காதுல முணுமுணுத்தாரு செவிடரு. அழுகையில செவிடரோட தொண்ட அடச்சி வார்த்த சிக்கிக்கிச்சி. கோவிந்தனுக்கு இது சரியா படல. சொன்னத சொல்லிட்டு கோவிந்தனையே உத்து பாத்துக்கிட்டு இருந்தவரு மறுபடியும் ஒரு லோட்டா சாராயத்த மடமடன்னு குடிச்சாரு.
“யோவ், பூங்காவனம் சொக்க தங்கம் யா.”
“செவிடா, எம்புள்ள தங்கமின்னு எனக்கு தெரியாதா யா. அத எதுக்கு யா இப்ப சொல்லுற...” கொஞ்சம் கடுசா தான் கேட்டாரு கோவிந்தன்
“உங்கிட்ட சொல்ல வேணாமின்னு தான் யா இருந்தேன். ஆனா, மனசு கேக்கலியே..”
“என்னத்த யா மனசுல வச்சிக்கிட்டு பேசுற. எதுவா இருந்தாலும் சொல்லிரு யா...”
“பூங்காவணம் செத்ததுக்கு கரணமே சின்னவன் முருகனும் சாமுண்டியும் தான் யா...”
“என்ன யா சொல்லுற...!!!” செவிடரு சொன்னத கேட்டு கோவிந்தன் மனசுல இடி விழுந்தது போல இருந்தது.
“ஆமாம், யா சின்னவனுக்கும் சாமுண்டிக்கும் உறவிருந்திருக்கு யா. அது தெரிஞ்சி தாங்காம தான் யா செத்தான் பூங்காவனம்...” அழுகையோட சேத்து பொங்கி வந்துச்சி வார்த்தைங்க செவிடரு வாயிலருந்து.
“யோவ்... எவ்வளவு நெஞ்செழுத்தம் யா உனக்கு. ஏதோ இவ்வளவு நாளு பழகுனதுக்கு பாக்குறேன்...” துடிச்சி எழுந்து கைய ஓங்கிட்டாரு கோவிந்தன். அடிக்க கை நீளுச்சே தவிற அடிக்கல.
“கோவிந்தா, இது தானப்பா நெசம். ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடந்தப்பவே தெரிஞ்சி போச்சிப்பா எனக்கு. முனீஸ்வரன் கோயிலுக்கு பின்ன முருகனும் சாமுண்டியும் பேசிக்கிறத இந்த காதால கேட்டேனப்பா. இதே கதால தான் கேட்டேன்...” பேசி முடுச்ச செவிடரு மயங்கி சரிஞ்சி போனாரு. குடிச்ச போதையெல்லாம் எறங்கிப்போச்சி கோவிந்தனுக்கு. நாடி நரம்பெல்லாம் வெறு ஏறிப்போயி கோவத்தோட நடந்தாரு கோவிந்தன். ஒரு பக்கம், இப்படி ஒரு கீழ்தரமான வேலைய பாத்துட்டானே பையன்னு கோவம் இன்னொரு பக்கம், நாம பெத்த பய இப்படி வழி மாறிப்போயிருக்கானேன்னு வருத்தம். வீட நெறுங்க நெறுங்க கோவிந்தனோட கோபத்த பின்னுக்கு தள்ளிட்டு மூத்த புள்ள மேலருந்த பாசம் முன்னேறி வந்துச்சி. பாசத்தோட சேந்து கண்ணீரும் கொடங்கொடமா கொட்டுச்சி கோவிந்தன் கண்ணுலருந்து.
“டேய் முருகா...முருகா...” வீடுக்கு வெளிய இருந்தபடியே சத்தம் போட்டாரு கோவிந்தன். பதறியடிச்சி ஓடி வந்தான் முருகன்.
“என்னப்பா, குடிச்சிடியா. உள்ள வாப்பா...” முருகன் புடிச்ச கைய ஒதறி தள்ளிடு அவன மொறச்சி பாத்தாரு கோவிந்தன்.
“எதுக்கு டா இப்படி பண்ண ??”
“என்னப்பா...” ஒன்னும் புரியாம முழிச்சான் முருகன்.
“எதுக்கு டா என் புள்ளய கொன்ன...?”
“எப்பா...” பொத்துன்னு கோவிந்தன் கால்ல விழுந்து அழுது பொறண்டான் முருகன். எதுவும் சொல்லல அழுதான். புடிச்ச காலயும் விடல.
“என் மூத்த பய போல ஒரு முத்த பெத்த எனக்கு பொறந்தவன் தானா டா நீ.” எந்திரிக்காம தரையிலய பொறண்டு அழுதான் முருகன்.
“டேய், உன்ன போல ஒரு புள்ள கூட கடைசீ காலத்த கழிக்கிறதுக்கும் செத்த பின்ன நீ கொள்ளி வைக்கிறதுக்கும் அனாத பொணமாவே சாகலாம் டா.”
முருகன் புடிச்சிக்கிட்டிருந்த கால ஒதறி தள்ளிட்டு மடமடன்னு நடந்தாரு கோவிந்தன்.
ஒரு சின்ன சபலத்தால அப்பனையும் அண்ணனையும் இழந்தான் முருகன். சாகுற வரைக்கும் இந்த பழி முருகனையும் சாமுண்டியையும் தினம் தினம் சாகடிச்சிக்கிட்டே தான் இருக்கும்.
-முற்றும்-